Followers

my adds

Tuesday, 16 February 2016

இன்றைய சிந்தனை-Today's thought




திருப்பாடல்கள் 103:13, 17-18
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல்
ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.

ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்;
அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.

அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து
அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
 

மத்தேயு 6:14-15
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால்
உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.

மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில்
உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

மத்தேயு 6:16-18
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல
முகவாட்டமாய் இருக்க வேண்டாம்.
தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே
அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

நீங்கள் நோன்பு இருக்கும்போது
உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.

அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது;
மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும்.
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

  திருப்பாடல்கள் 84:11-12
ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்;
ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்;
மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.

படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்!

யோவான் 15:5-9
நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள்.
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனி தருவார்.
என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.

என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார்.
அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால்
நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே
என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.  

யோசுவா 1:9
வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே!
ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான்
நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.


யோவான் 14:13-14
நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.
இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.

நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.

மத்தேயு 22:37-39
'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும்,
முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து',

இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.

'உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக',
என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.


எசாயா 53:5-6
அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்;
நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்;
நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்;
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.

ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்;
நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;
ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

  

No comments:

Post a Comment

arulalans