பிரியமானவர்களே,
மாம்சத்திலும் ஆவியிலும்
உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச்
சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத்
தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். – 2கொரிந்தியர் 7:1
தேவனுடைய
வார்த்தை நாம் பரிசுத்தமாகிறதிலே பூரணமாகக்கடவோம் என்று சொல்லுகிறது. இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை
உண்டு, ஒரு முடிவு உண்டு. ஆனால் பரிசுத்தத்திற்கு முடிவே கிடையாது. அநியாயஞ்செய்கிறவன் இன்னும்
அநியாயஞ்செய்யட்டும்,
அசுத்தமாயிருக்கிறவன்
இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன்
இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன்
இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான்
அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.(வெளி 22:11-12). இந்த உலகத்தில்
எப்படி வாழவேண்டும், நல்ல அந்தஸ்தில்
தேவன் உங்களை கொண்டுவரவேண்டும். நீங்கள்
நல்ல நிலைமையில் உயர்த்தப்பட வேண்டும்.
உங்கள் பிள்ளைகளில் வாழ்வு ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிற
நீங்கள் பரிசுத்தமாய் வாழ் வேண்டும் என்ற நினைவுள்ளவர்களாயும் இருக்க
வேண்டும். ஆம் இன்னும்
பரிசுத்தப்படவேண்டும், இன்னும்
சுத்திகரித்துக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சை உங்களை பரிசுத்தத்தின் மேல்
பரிசுத்தமடையச் செய்கிறது.
நீங்கள் பரிசுத்தமாய் வாழவேண்டும் என்பதே தேவனுடைய
சித்தம், அதற்கே தேவன்
உங்களை அழைத்திருக்கிறார். நீங்கள்
பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.(1தெச 4:3). தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல
பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.(1தெச 4:7). நாம் பரிசுத்தத்தில் பூரணமடைய வேண்டும் என்றால்
தேவ பயம் நம்மிடத்தில் காணப்படவேண்டியது அவசியமாகும்.
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு
உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே,
மாம்சத்திலும் ஆவியிலும்
உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச்
சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத்
தேவபயத்தோடே ப+ரணப்படுத்தக்கடவோம்.(2கொரி 7:1)
தேவ பயம் இல்லாதவர்கள் ஒருபோதும்
பரிசுத்தத்தில் வளர முடியாது.
கர்த்தருக்கு பயப்படுகிறவன் பாவத்திற்கு விலகி தன்னை காத்துக்கொள்வான். கர்த்தருக்கு பயப்படுகிறவன் இச்சைகளுக்கு விலகி
தன்னை காத்துக்கொள்வான்.
துன்மார்க்கனுடைய
துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும், அவன் கண்களுக்குமுன் தெய்வபயம்இல்லை.(சங் 36:1).
யோசேப்பின்
வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள், யோசேப்பு தன்னை
பாதுகாத்துக் கொண்டதின் காரணம் தன்னை பாதுகாத்துக் கொண்டதின் இரகசியம் அவருக்கு
இருந்த தேவ பயம் தான். அவனுக்கு பாவ சோதனை
வந்த போது, யோசேப்பு
மனுஷக்கு முன்பாக பாவம் செய்கிறேன் என்று எண்ணாமல் தான்னை தேவன் எப்போதும்
காண்கின்றார் என்பதை உணர்ந்து தேவ பயத்தோடு தன்னை காத்துக்கொண்டான். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு
இணங்காமல், அவளை நோக்கி: இதோ,
வீட்டிலே என்னிடத்தில்
இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில்
ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே
என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர
வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு,
தேவனுக்கு விரோதமாய்ப்
பாவம் செய்வது எப்படி என்றான்.(ஆதி 39:8-9).
யோசேப்பைப்போல
நீங்களும் எதைச் செய்தாலும் மனிதர்களுக்கு முன்பாக செய்கிறதாய் எண்ணாமல் தேவன்
உங்களை காண்கிறார் என்பதையும், தேவனுக்கு
முன்பாக நடக்கிறீர்கள் என்பதை எண்ணுங்கள்.
நீங்கள் தேவ பயத்தோடு பரிசுத்தத்தை பாதுகாக்க நீங்கள் தீர்மானிக்கும் போது
கர்த்தர் நிச்சயமாக உங்களுக்கு உதவிசெய்து பாவ சோதனைகளுக்கு விலக்கி
காப்பார்.
தானியேலின் வாழ்க்கையை
கவனித்துப்பாருங்கள். வேசி மார்க்கத்தின்
தாய் என்று அழைக்கப்படுகிற பாபிலோன் தேசத்திற்கு அடிமையாக கொண்டு சென்ற போது,
அவன் தேவனுக்கு
பயந்தபடியினால் பரிசுத்தமாய் ஜீவிப்பதற்கு தன்னை ஒப்புகொடுத்தான். தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர்
பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு,
தன்னைத்
தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில்
தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.(தானி 1:8-9). நம்முடைய தேவன் பரிசுத்தத்தில் பூரணராய்
இருக்கிறது போல நீங்களும் பரிசுத்தத்தில் பூரணராய் வாழும்படி நாடுங்கள்.
உங்களை அழைத்தவர்
பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள்
நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
நான் பரிசுத்தர், ஆகையால்
நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. - 1பேதுரு 1:15-16
No comments:
Post a Comment