Followers

my adds

Friday, 19 February 2016

Heart Touching Tamil Xtien Song




                                                      
                                         

  


Kuyavane  Kuyavane

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே.

மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னை,  தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே


Athisayangal seigiravar nam

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம்- புயல் காற்றையும்
தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் - ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Aatharam neer thaan aiya

ஆதாரம் நீர் தான் ஐயா
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணர் நீர்தானையா - இயேசையா

உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பம் தான் நிறைக்கின்றது

குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது

உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்


Anbe pradhanam sagothara

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்


Athikalai um thirumugam

அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்பு வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

Aathumame en muzhu ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து - இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து

தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் ,மேலான

வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்

துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே

Athikalayil palanai thedi

அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாடடையும் குடில் நாடி தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
 அதிகாலையில் பாலனை தேடி வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்   அன்னை மரியின் மடி மேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க   மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த முன்னணை முன்னிலை நின்றே தம் சிந்தை குளிர்ந்திட போற்றும் நல் காட்சியை கண்டிட நாமே


Thanimaiyin paathaiyil

தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ   ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான்   சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே   உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே   பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் –

Kalvari anbai ennidum velai

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே- கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போது அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே

எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ- எங்களை
தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

Kathiravan thondrum kaalaiyithe

கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று, பறவை, ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே

காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம்

கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார்

எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டடைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே

காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்

வானமும் பூமி யாவும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர்

Thodum en kangalaiye

தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டுமே
இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே
தொடும் என் காதுகளை
உம் குரலை கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மைப்போல்
என்னை மாற்றுமே

தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப் பாட வேண்டுமே
தொடும் என் ஆன்மாவையே
என் பாவம் போக்க வேண்டுமே
இயேசுவே என் பாவம் போக்க வேண்டுமே

தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆறவேண்டுமே
இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே
தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே
இயேசுவே உடல் நோய்கள் தீர வேண்டுமே

Aathumame en muzhu ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து - இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து

தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் ,மேலான

வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்

துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே





No comments:

Post a Comment

arulalans